Header image alt text

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) அமைப்பு, தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுத்த சமூக மீள் எழுச்சித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, அமைப்பின் வரலாறு நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்பு, யுத்தத்தினால் சிதைவடைந்து காணப்பட்ட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில், தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்கவும் இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கட்டியெழுப்பவும் புளொட் அமைப்பு தனது வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக தீவிரமாக செயற்பட்டிருந்தது.
Read more

இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்திவந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் நேற்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின்போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. Read more

துருக்கியின், கிரேக்கம் மற்றும் பல்கேரிய எல்லையோடு ஒட்டிய எடிரன் மாகாணத்தில் பல இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிய பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, பங்களாதேஸ், பாகிஸ்தான், மியன்மார், இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 240 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. துருக்கியில் தங்கி இருப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் எவையும் இல்லாத நிலையிலேயே அவர்கள் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலாளர் விஜய் கேஷவ் கோகலே ((Vijay Keshav Gokhale) இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டி.ஜ செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அடுத்தாக அவர் சீனாவுக்கும் கிழக்காசிய நாடுகள் தொடர்பிலும் அவர் அக்கரை செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் புதிய வெளிவிவகார செயலாளராக பதவியேற்ற அவர், எதிர்வரும் 2 வருடங்களுக்கு அந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை கையேற்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது விசேட பிரிவு ஒன்றை அமைத்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை அண்மித்ததாக நடைபெறும் உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிவதே இதன் நோக்கமென்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விஷேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Read more

இலங்கை அரசாங்கம், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமைக்கு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் ப்ரட் அடம்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில், ப்ரட் அடம்ஸ் இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். Read more

மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீனை தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

ஜனாதிபதி யமீன் சட்டங்களை மீறியுள்ளதால் அவர் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மவ்மூன் அப்துல் கயூம் மற்றும் மொஹமட் நஷீட் உள்ளிட்ட மாலைதீவுகளின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஏனைய அனைத்து தலைவர்களும் மனுவில் கையொப்பமிட்டுள்ளனர். Read more

பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி விசாரணைகள் அறிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித தீர்மானமும் எடுக்கும் அதிகாரமில்லை என்றும்

ஆயினும் தேர்தலை தள்ளிப்போடுவது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள பிணைமுறி தொடர்பான அறிக்கையும், அரச பொது சொத்துக்கள் ஊழல் தொடர்பான அறிக்கையும் தொடர்பாக பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க Read more