Header image alt text

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகரத்திற்குள் நுழைவதற்கு நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தடையுத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். Read more

இலங்கை வந்துள்ள ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்காக குறித்த ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை குழுவினர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்கு இடையிலான தொடரூந்து சேவை இரண்டு மாதங்களுக்கு தற்காலிமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த தொடரூந்து நிலையங்கள் இடையே உள்ள பாலம் ஒன்றின் புனரமைப்பு பணி இதற்கு காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தொடரூந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.

கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே கடற்படையின் வாகனம் மோதி விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். Read more