Header image alt text

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 44ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

இன்றுகாலை யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபிகளுக்கும் அங்கு கலந்து கொண்டவர்களால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். Read more

இந்திய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன், இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன், மலேசிய நாட்டின் கல்வி அமைச்சின் துணை உயர்கல்வி அமைச்சர் பா.கமலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியா, தமிழ்நாடு அரசாங்கத்தின் பிரதான செயலகத்தில் இந்திய தமிழ்நாடு பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன் தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. Read more

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன.

இதற்கமைய, யாழ் – அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த, 24 வயதான நவரத்தினம் அருண், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதான சந்திரசேகரம் ஜெயசந்திரன், யாழ். மாலுசந்தி பகுதியைச் சேர்ந்த 19 வயதான சிவசுப்பிரமணியம் சிந்துஜன் மற்றும் யாழ். பருத்திதுறையை சேர்ந்த 19 வயதான சின்னத்துரை கிருஸ்ணரூபன் ஆகியோரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பதை தீர்மானிப்பதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்பின் தலைமையில் இவர் அடங்கலாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிகாரை, கே.டீ.சித்ரசிறி, சிசிர அப்ரு ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் இதுவரை 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 14பேர் வேட்பாளர்கள் ஆவர். கடந்த டிசம்பர் 09ஆம் திகதியிலிருந்து 42 தேர்தல் சட்டமீறல்கள் பதிவாகியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் 92பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 06 வேட்பாளர்கள் உள்ளடங்குகின்றனர். மேலும், தேர்தல் தொடர்பில் இதுவரை 90 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்விடயம் தொடர்பில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 08 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகைமை பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாளைய தினம் முன்னெடுக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். Read more

மாங்குளம் – பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கோளாறு ஏற்பட்ட நிலையில், பழைய முருகண்டிப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பார ஊர்தியில், அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அரசியல் கட்சிகள் தனியாருக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர் ஒட்டியமை தொடர்பாகவும் கட்சியினது அல்லது வேட்பாளரது கட்டவுட்டுக்கள் வைத்தமை தொடர்பாகவுமே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காணாமல் போயுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.

வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த கப்பலுடன்,குறித்த மீனவப் படகு மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர் என்துடன், ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சிற்றூழியர்கள் 68 பேருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவை வழங்கக்கோரி இப்போராட்டம் நடைபெறுகிறது. சிற்றூழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் குப்பை அகற்றும் பணி தொடக்கம் பல்வேறு பிரிவு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more