Header image alt text

ஏனைய பௌர்ணமி தினங்களில் காட்சியளிக்கும் நிலவை விட, 14 மடங்கு பெரிய நிலவை இன்று அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களை விடவும், சுமார் 30 வீதம் பிரகாசம் அதிகமாக காணப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த வேண்டாம் என, அரசியல் கட்சிகளிடம், கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். Read more

வவுனியாவிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் தரிப்பிட வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்தை மூடி, பஸ்கள் உள்ளே செல்ல முடியாத படி, பெரல்கள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வௌியிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

லங்கையில் தற்போது 25,000 வரையான வௌிநாட்டு ஊழியர்கள் தங்கியுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சீன மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என, குடிவரவு குடிகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். Read more

கோவில்குளம் வ /இந்துக் கல்லூரியின் புதிதாக அமைக்கப்பட உள்ள கோயிலிற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 01.01.2018 இன்று பாடசாலையின் அதிபர் திரு பூலோகசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .இக்கோயிலுக்கான நிதியானது வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ .ஜி ரி .லிங்கநாதன் அவர்களின் பிராமண அடிப்படையிலான நிதியில் இருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜி .ரி .லிங்கநாதன் பாடசாலையின் அதிபர் திரு .பூலோகசிங்கம் ,முன்னாள் அதிபர்களான திருமதி .நடராஜா மற்றும் வையாபுரிநாதன் ,சிவன் கோவில் தலைவர் நவரட்ணம் ,கோவில்குளம் கண்ணன் கோவில் தலைவர் சுந்தரம் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். Read more