இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நேபாளத்தின் இராணுவப் படையின் பிரதானி ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று முற்பகல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவை, மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே, ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரியின் இந்த விஜயம் அமைந்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில், இரு நாடுகளினதும் இராணுவத்தினரின் பங்களிப்பு, அனர்த்தங்களின் போதான படையினரின் பங்களிப்பு மற்றும் அவற்றுக்கான பயிற்சிகள் தொடர்பில், இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more