Header image alt text

கொழும்பு நகரத்தில் பயணிகள் போக்குவரத்துக்காக மின்சார பஸ் வண்டிகள் 18இனை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார பஸ்களில் தரத்தில் உள்ளடங்கி இருக்க வேண்டிய விடயங்கள் சம்பந்தமான அறிக்கை ஒன்று போக்குவரத்து சபையால் போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கேள்விப்பத்திரம் கோரப்பட்டு இந்த பஸ்கள் கொள்வனவு செய்யப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன கூறியுள்ளார். Read more

புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு அங்கி ஒன்று பாதுகாப்பு தரப்பினரால் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், அந்தப் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பு தரப்பினரால் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தி, தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைகழக கலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கூறுகையில் அவர் இதனை கூறியுள்ளார். Read more

மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்பு பகுதியில் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மீது நேற்று நள்ளிரவு மீனவர்கள் தாக்கியதில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை வீசி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீன்பிடி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் களப்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more