(எம்.நியூட்டன்)
விடுதலைப் புலிகளின் காலத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் பலம் எவ்வாறு குறைந்ததோ அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் குறைந்தால் தமிழ் மக்களின் பலம் மீளவும் குறைந்து விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று அதனை நிறைவேற்றினால் யாழ். மாநகரம் மிக அழகான பசுமை நிறைந்ததாகவும் இருக்கும். இவ்வாறு அதற்கேற்றவாறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியற் தீர்வை பெற்றுக் கொள்கின்ற அதேநேரத்தில் அபிவிருத்தியையும் முன்னெடுக்க வேண்டும். அத்தோடு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளவேண்டும். Read more