Header image alt text

வெள்ளை வேன் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் ஏனைய முன்னாள் உத்தியோகஸ்தர்கள் ஐவருக்கும் பிணை வழங்கபட்டுள்ளது. சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more

சுவிட்ஸர்லாந்து நீதிமன்றத்திற்கு வெளியே சுமார் 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றையதினம் 13பேரும் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் பல்வேறு வழிகளில் சுவிஸ்சர்லாந்தில் புலிகளுக்காக நிதிசேகரிப்பில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மனைவியை கொலை செய்து கணவன் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சடலங்கள் இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற தகராறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 51 வயதுடைய செல்வம் புஷ்ப்பராணி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பியசேன எதிரிசிங்ஹ என்பவரே கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Read more

இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் மீதும் சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கையிழந்தே காணப்படுகின்றனர் என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more

யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிப நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியுள்ள சம்பவம் சிசிரீவி பாகாப்பு புகைப்பட கருவியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் அந்த நிறுவனப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு யாழப்பாணம் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய அந்த தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் பணிப்பாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read more

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 78 முறைப்பாடுகள் காவல்துறை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 9ஆம் திகதிமுதல் நேற்றுவரையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 37 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. Read more

கிளிநொச்சி – பளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை காவல்துறை நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பளை நகரப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 38வயதான குடும்பஸ்தரே காயமடைந்துள்ளார். Read more

கடந்த 6 ஆம் திகதி கடத்தி செல்லப்பட்ட திருகோணமலையை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மகன் கம்பஹா மிரிஸ்வத்த பிரதேசத்தில் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த இளைஞனிடம் இன்று வாக்குமூலம் பெறுவதற்காக திருகோணமலை காவல்துறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். திருகோணமலை 4ஆவது மைல்கல் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான குறித்த இளைஞன் கடந்த 6ஆம் திகதி இரவு கடத்தி செல்லப்பட்டுள்ளார். Read more

சிறீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று 7ஆவது நாளாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 2ஆம் திகதியிலிருந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தாதியர்களின் வரவினை கண்காணிக்க கைவிரல் அடையாளத்திற்குரிய இயந்திரம் பொருத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். தங்களது கோரிக்கைக்கு இதுவரை எவரும் இணக்கம் தெரிவிக்காமையினால் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தாதியர்கள் தெரிவித்துள்ளனர். Read more

கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பளை பகுதியை சேர்ந்த சிவமூர்த்தி சுரேந்திரன் (வயது 38) என்பவரே படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் மிதிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் எனவும் , அவர் வெடிபொருள் ஒன்றினை பிரித்து வெடி மருந்தினை அகற்ற முற்பட்டபோது குறித்த வெடிபொருள் வெடித்ததால் அவர் படுகாயமடைந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. Read more