Header image alt text

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

சுமார் ஒன்றரை தசாப்த காலத்துக்குப் பின் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரதமருடனான இந்தச் சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் பங்கேற்றிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவ தயாராக உள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருப்பது 15 வருடங்களுக்கு பின்னராகும் என்பது குறிப்பிடத்தக்கது. Read more

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஷஸ்மத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய நாட்டில் நிலவிய உர தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதன் நிமித்தம், உரிய நேரத்தில் உரத்தினை இலங்கைக்கு அளித்த பாகிஸ்தானிய பிரதமர் ஷஹித் கஹகான் அப்பாசி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றியினை தெரிவித்தார். Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

குறித்த உத்தரவை மீறி நடத்திச் செல்லப்படுகின்ற காரியாலயங்கள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறினார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். Read more

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தவர்களில், 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளனர். Read more

யாழ். பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை அவரது சமாதான அறையில் நேரில் சந்தித்த யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். கட்டளைத் தளபதியுடன் யாழ்பாணம் நகரத் தளபதி பிரிகேடியர் சரத் திசாநாயக்கவும் இராணுவ சட்ட ஆலோசகரும் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிய மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற காணியை விடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more

மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவப் படையினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலாச்சார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த இடத்தில் சிற்றூண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவப் படையினர் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறும் மன்னார் பிரஜைகள் சங்கம், இந்த இடத்தில் இவ்வாறான செயலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது, அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதை என குறிப்பிட்டுள்ளது. Read more

புலிகள் இயக்கத்துக்காக சுவிட்சார்லாந்தில் நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர், அந்த நாட்டின் பிராந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவர்கள் சுமார் 15.3 மில்லியன் டொலர்களை புலிகள் இயக்கத்துக்காக வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் இலங்கை, ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் முன்னால் உலக தமிழர் ஒழுங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. Read more

இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. Read more

மனித உரிமைகள் சார்ந்த தங்களின் பரிந்துரைகள் பல அமுலாக்கப்படவில்லை என்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் தீபிகா உடகம இதனை ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து கூறியுள்ளார்.

தங்களால் முன்வைக்கப்பட்ட 40 சதவீதமான பரிந்துரைகளை அரசாங்கம் இன்னும் அமுலாக்கவில்லை. அதற்கு இலங்கையின் சட்டத்துறை கலாசாரமே காரணமாகும். இலங்கையில் தண்டனைகள் இல்லாத பட்சத்தில், சட்ட ஒழுங்குகளை சமுகத்தில் பரவச் செய்வது சிரமம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more