Header image alt text

வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த வருடத்திலாவது வடமாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒற்றுமைகள் உள்ளதாக தெரிவித்த அவர், சகல புதிய அரசாங்கங்களும் ஆரம்ப காலத்தில் சிறப்பாக இயங்கும். Read more

புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் 9ஆவது நினைவு தினம் இன்றையதினம் கொழும்பு பொரளை மயானத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அத்திடிய பிரதேசத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த தமிழர்கள், அங்குள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தமிழக அரசு உணவு, உடை, படிபணம் உட்பட சில சலுகைகளையும் செய்து வருகிறது. அப்படி இருந்தும் கூட கடந்த சில மாதங்களாகவே ஈழத் தமிழர்கள் பலர் இலங்கையில் உள்ள சொந்த ஊர்களுக்கு திரும்பியும் வருகிறார்கள். ஆனால், பெரும்பாலான அகதிகளோ இன்னும் அந்தந்த பகுதி முகாம்களில் தங்கியுள்ளனர். Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளத்தின் பெயர் www.elections.gov.lk என்பதாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த தேர்தல் செயலகத்தின் அதாவது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் புத்தாண்டிலிருந்து இந்த பெயர்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக www.selection.gov.lk என்ற பெயருக்கு பதிலாக தற்பொழுது www.elections.gov.lk என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன. Read more

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக இராஜகிரிய பகுதியில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வை வழங்கும் வகையில் இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் நிறுவனமொன்றுடன் உள்நாட்டு நிறுவனமொன்றும் இணைந்து 2016 ஆம் ஆண்டு இந்த நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தன. குறித்த மேம்பாலமானது, 4 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்கு வழிப்பாதைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும்.

முன்னாள் சுகாதார அமைச்சர்களில் ஒருவரான ரஞ்சித் அத்தபத்து இன்றுகாலை காலமானார். தனது 84 ஆவது வயதிலேயே அவர் காலமாகியுள்ளார்.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன் முறையாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற அவர், இலங்கை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தீக்கிரையாகி பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசித்துவந்த தம்பதியினருக்கிடையில் தினமும் குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் வாய்த்தர்க்கம் அதிகமானதை தொடர்ந்து கணவர் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்ட முயற்சித்ததாகவும், எரியூட்டப்பட்ட குறித்த பெண் தாம் மாத்திரம் உயிரழக்க வேண்டிய தேவை இல்லை என்பதோடு கணவரும் குற்றவாளியே என கூறியபடி கணவரை கட்டியணைத்துள்ளார். Read more

காலி முகத்திடலில் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின், 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான, சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வர்ட் கலந்துகொள்ளவுள்ளார். எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார். Read more

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து ஏற்பட்டுள்ள பல சட்ட சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் இன்று சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளனர்.

மத வழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது உள்ளிட்ட சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.