மாலைதீவு கடற்பரப்பில், கவிழ்ந்த நிலையில் மிதந்துகொண்டிருந்த இலங்கைக்குச் சொந்தமான மீன்பிடிப் படகொன்றை அந்த நாட்டின் கரையோர பாதுகாப்புப் படை கண்டுபிடித்துள்ளது.

இந்தப் படகை கரைக்கு இழுத்து வரும் முயற்சியில் கரையோரப் படையினர் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. படகு மட்டுமே தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை என்றும் படையினர் கூறியுள்ளனர்.இந்தியா மற்றும் இலங்கைக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் சில, கடந்த வருடம் டிசம்பர் மாதம் வீசிய ‘ஓகி’ புயலால் மாலைதீவு கடற்பரப்புக்கு அடித்துவரப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.