Header image alt text

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுவதுடன், இதன் முதல் கட்டம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. Read more

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமானதென கருதப்படும் சீருடையும், வெடிப்பொருட்களும் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்க்குழாய் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியாளர்களுக்கு குறித்த பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து, அவர்கள் இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் Read more

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மூன்று மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று கடற்றொழிலுக்காக சென்ற மீனவர்களே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமற்போயுள்ளனர். காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதம் மாதம் 28ம் திகதி பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் பெறுபேறுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். Read more

வவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்குட்பட்ட புதிய கொலனி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் சந்தனமேரி. கணவர் யுத்த நடவடிக்கை காரணமாக வலுவிழந்தவராக, எந்தவிதமான வேலைகளும் செய்யமுடியாதவராக வாழ்ந்து வருகிறார். பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.

சந்தனமேரி அவர்கள் தினமும், சிற்றுண்டி வகைகளை தயாரித்து விற்பனை செய்து கிடைக்கக்கூடிய பணத்தைக் கொண்டே குடும்பத்தின் நாளாந்த செலவுகள், கல்வி செலவுகள் என்பன ஈடுகட்டப்படுகின்றது. போதியளவு முதலீடு இல்லாத நிலையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. மூன்று வேளை உணவு என்பதுகூட நிச்சயமற்றுக் காணப்படுகின்றது. Read more

வடமாகாணத்தில் தகுதிபெற்ற எஞ்சிய 494 தொண்டர் ஆசியர்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வடமாகாண சபையின் வாராந்த செயலாளர் மட்ட கூட்டத்தில் வைத்து முதலமைச்சர் இந்த தகவலை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக முதல்கட்டமாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்த 142 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் சிலவற்றை பாணந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையே திடீர்சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது இவ்வாறு விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் விமானப்படை வீரரொருவரின் வீட்டில் இருந்து குறித்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்புவதற்கான ஆவணத்தில், இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிடம் இருந்து பலவந்தமாக கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

த கார்டியன் இணைத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோரும், அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் இரண்டு பிள்ளைகளும் விரைவில் நாடுகடத்தப்படவுள்ளனர். மத்திய குயின்ஸ்லேண்ட் பிலோயிலா பகுதியில் வசித்துவந்த அவர்களது வீசா காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது அவர்களை நாடுகடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read more

ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கவுள்ள ஜனாதிபதி, ஜப்பானின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி நாளை ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், மார்ச் 14 ஆம் திகதியன்று உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக பிரதமர் அபே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். Read more