இலங்கையின் நல்லிணக்க மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டோங் லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நிரந்தர அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைமையை இந்த செயற்பாடுகள் உறுதிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு, மீன்பிடி ஏற்றுமதி அனுமதி மற்றும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை என்பன மீள வழங்கப்பட்டமையானது, அதன் பொருளாதாரத்தை செழிப்படைய செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.