ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று (13-05-2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரையில் வவுனியாவில் நடைபெற்றது.
இதன்போது இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. முக்கியமாக அரசுக்குள் உள்ள தற்போதய குழப்பங்களைப் பார்த்தால் அரசியல் தீர்வு சம்மந்தமாக எந்தவொரு முடிவும் வராது என்று பலராலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
எமது கட்சியைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்டம் பற்றி மிகக் கவனமாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், அதேநேரம் வெளிநாட்டுக் கிளைகளின் கருத்துக்களும் ஆழமாக ஆராயப்பட்டு அதிலுள்ள விடயங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் நிர்வாகம் மற்றும் வெளிநாட்டுக் கிளைகள் சம்மந்தமாக பலமுடிவுகள் எடுக்கப்பட்டதோடு அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்க்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.