மத்திய அரசின் 1000 பாலம் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண சபையினால் வவுனியா மாவட்டத்திற்கு 18 பாலங்களும் வவுனியா வடக்கிற்கு 06 பாலங்களும் ஒதுக்கப்பட்டது .அதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 04 பாலங்கள் 14.05.2018 அன்று பொது மக்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களான மாறாயிலுப்பை ,நெடுங்கேணி ,பெரியமடு ,பழையவாடி ஆகிய கிராமங்களின் பிரதான வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 04 பாலங்கள் 14.05.2018 அன்று திறந்து வைக்கப்பட்டன .01 . மாறாயிலுப்பை நெடுங்கேணி பாலம்
02. நெடுங்கேணி தபாற்கந்தோர் சேனைப்புலவு பாலம்
03. பெரியமடு குளவிசுட்டான் பாலம்
04. பழையவாடி சம்மளம்குளம் பாலம் .
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ப .சத்தியலிங்கம் ,ஜி .ரி .லிங்கநாதன் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் திரு .தணிகாசலம் பிரதேச சபை உறுப்பினர்கள் ,வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதி பணிப்பாளர் திரு .சிவநேசன் ,வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு .பரந்தாமன் பிரதேச சபையின் செயலாளர் திரு .சத்தியசீலன் மற்றும் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.