பசு வதைக்கு எதிராகவும் கொல்களத்தை மூடுமாறு தெரிவித்தும் சாவகச்சேரி மத்திய பஸ் நிலையத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில், யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர், நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியர், ஜாக்கிரத சைதன்ய சின்மிய மிஷன் சுவாமிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.
நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலாவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று அனைத்து பேரூந்துகளும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் நா.நகுலராஜா நேற்று தெரிவித்துள்ளார்.