 நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பம் இடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பம் இடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
பிரதம நிதியரசர் நலின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான பிரசன்ன ஜனவர்தன மற்றும் ப்ரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இடைக்காலத் தடையுத்தரவு இன்றுமாலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதிவரை செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் 13 மனுக்கள் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. Read more
 
		     எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். கபில சந்திரசேன ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். கபில சந்திரசேன ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியார் என்பது குறிப்பிடத்தக்கது.  நாட்டின் அனைத்து உதவி மற்றும் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுதினம் (15), கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து உதவி மற்றும் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுதினம் (15), கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது சம்பந்தமாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது சம்பந்தமாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.  இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் இரு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் இரு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  ஜப்பானில் தொழிலில் ஈடுபட்டுள்ள உயர் தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.
ஜப்பானில் தொழிலில் ஈடுபட்டுள்ள உயர் தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.  கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்துள்ளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்துள்ளார்.  மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 104வது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் நேற்று அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 104வது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் நேற்று அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை.  கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.
கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.