

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் இன்றுபகல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் 19ம் திகதிக்கு, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்.
இதன்படி பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்திருந்தார். Read more
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவி வகித்த முடியாது. எனவே அவர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற சபை அமர்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
வடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.