வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமென்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர், வெளிநாடுகளில் மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டுள்ள நபர்களுக்கு மீண்டும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பம் இந்த வேலைத்திட்டத்தன் மூலம் கிட்டுவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, அவுஸ்திரேலியா, சுவீடன், நியுசிலாந்து, டென்மார்க், சுவிற்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தன இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழை வழங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் வீதி – மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி அவர்கள் ஏப்ரல் 2 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
வெளிநாட்டு தூதுவர் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரை செய்யப்பட்ட பாராளுமன்ற உயர்பதவிகள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு மோட்டர் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்தள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோகசபை கூறியுள்ளது. நாளை காலை 09.00 மணிமுதல் நாளை மறுநாள் காலை 09.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
2018ம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் எல்லை ஊடாக இலங்கை ஏதிலிகள் சிலர் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.