Header image alt text

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக இருந்தால் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். கலென்பிந்துனுவவெ பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முதலில் யோசனை கொண்டு வந்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில், இலங்கையில் இருந்து இடம்பெயர முயற்சித்த 30 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தென் கடற்பரப்பில் 80 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் இருந்த குழுவினர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.

தெற்கு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் கடற்படை படகு மூலம் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொ மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத்தாக்கல் செய்திருந்தார். Read more

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவை, குறித்த பதவியிலிருந்து நீக்க, அமைச்சரவை பத்திரமொன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தினங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவருகிறது. அத்துடன், குறித்த பதவிக்கு புதிதாக யாரை நியமிக்கவுள்ளனர் என்பது பற்றி தெரியவரவில்லை.

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேச சபையால் சிவனொளிபாத மலைக்கு பிரவேசிக்கும் வாயிலில் ‘சிவபாதம்’ எனப் பெயரிடுவதாக எடுக்கப்பட்ட முடிவை உடன் இடை நிறுத்தும்படி மத்திய மாகாண ஆளுநர் மைந்திரி குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.

எந்த ஒரு தரப்பினருடனும் கலந்துரையாடாது மேற்படி பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடன் இடை நிறுத்தும்படியும் அவர் அறிவித்துள்ளார். ஊடகங்கள் மூலம் தாம் இதனைத் தெரிந்து கொண்டதாகவும் அதன் பின் இது விடயமாகத் தேடிப்பார்த்த போது அரச நிறுவனங்கள் அல்லது தொடாபுடைய அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காது தனி முடிவில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வதாக கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

அங்கு அவர் நிலக்கண்ணி வெடி அகற்றும் முகமாலை பிரசேத்துக்கு சென்று பார்வையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய சந்திப்புகளையும் அவர் அங்கு நடத்துவார் என்று கூறப்படுகிறது. நேற்று நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திருந்த நிலையில், இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 7 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற நிலந்த முணசிங்க உள்ளிட்ட ஆறு பேரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுபெற்ற அத்மிரல் வசந்த கரன்னகொட உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக பண்டார, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். Read more

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூவரை அனுப்பிவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர். Read more

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கையானது சட்டபூர்வமாக இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் புளோரிடாவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. Read more

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் சந்தேகத்துக்குரிய மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பகுதியில் வீட்டுப் பாவனைக்கான கிணறு ஒன்றை தோண்ட முற்பட்ட வேளையில் இந்த மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைக்காக தமது காவற்துறை குழு ஒன்று சம்பவ இடத்துக்கு சென்றிருப்பதாக மட்டக்களப்பு காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தள்ளார்.