உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரியதாரியாக கருதப்படுகிற சஹ்ரான் ஹசீமின் மைத்னுனரான ரிலா மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இச் செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் புலனாய்வு தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மாற்று பெயர்களில் இவ்வாறு சவூதி அரேபியா சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான், கொழும்பின் சில இடங்களில் தங்கியிருந்துள்ளார் என பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர்.
புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலேரியா கால்வாய்க்கு அருகில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நிரந்தர இராணுதளமொன்றை அமைப்பதற்கான திட்டம் எதுவுமில்லை என அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த நபர் நேற்று மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து இரண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 இந்திய அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளமை ஊடகச் செய்திகள் கூறுகின்றன.