Header image alt text

தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமலிருக்க தயாராகி வருவதாகவும், அவ்வாறு செயற்பட்டால் தாம் நீதிமன்றத்தை நாடத் தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லை-நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார்.

கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி காவற்துறையினர் கோரிக்கை விண்ணப்பம் முலம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதவானால் இந்த அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செப்பு தொழிற்சாலை கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட இன்சாப் அஹமட் ஈப்ராஹிமுக்கு சொந்தமானது. Read more

வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கந்தபுரம் தோட்ட காணியில் நேற்றுமாலை நிலத்தை பண்படுத்தி தீ வைத்தபோது கைக்குண்டொன்று வெடித்துள்ளது. அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட உரிமையாளர் இன்று வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அப்பகுதியில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளனர். Read more

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் காமினி செனரத் ஹேவாவிதாரன, உடன் அமுலுக்கு வரும் வகையில் காலி பொலிஸ் பிரிவிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 32பேர் விணையில் விடுதலையானமை குறித்த விசாரணைகள் தொடர்பிலேயே வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. Read more

சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

களனிக்கும் தெமட்டகொடையிற்கும் இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாகவே பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர், ஒசாமா பின்லேடனின் உருவப் படத்துடன் கூடிய போதனைப் புத்தகமொன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்துக்கிடமான இறுவட்டுகள், ஆஐ ரக சிம் அட்டைகள் இரண்டுடனான அலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். Read more

வவுனியாவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஓன்று இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த குருமார், இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் விபரங்கள் அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். Read more

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ். பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more

நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமையின் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கை அதிபர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட துன்பகரமான சம்பவங்களையடுத்து, மாணவர்கள் மனநல நீதியில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுடன், மாணவர்கள் வழக்கமான அட்டவணைக்கு ஏற்றவாறு செயற்பட சிறிது காலம் தேவைப்படுவதாக, இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.