Header image alt text

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரான, மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் ஆர். எம்.பி. நெலும்தெனிய இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார்.

கருப்பையா கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா இந்த வெடிப்புச் சம்பவத்தின் 10ஆவது சந்தேகநபரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் 14, 15ஆம் திகதிகளில் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு, சிறைச்சாலைகள் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றுகாலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையினர் அதனை மீட்கும் நடவடிக்கையினை பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது. அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார்.

தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களின் இரண்டாம் தவணை பாடசாலை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

இன்றுகாலை 7.35 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்ட ஜனாதிபதி, நேரடியாக சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்றுகாலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது சிலாபம் பகுதியைச் சேர்ந்த இருவரும், வந்தாறுமூலையைச் சேர்ந்த ஒருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 13பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6மணிவரை இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனங்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவொன்றை பதிவிட்டமை தொடர்பில் பிரதேசவாசிகள் தமது எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. Read more

பாதுகாப்பான சூழ்நிலையை காரணம் காட்டி எந்த தரப்பினராவது தேர்தலை பிற்போட எதிர்ப்பார்ப்பார்களாயின் அது தீவிரவாதத்திற்கு சமாந்தரமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட வேண்டியதே இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படை செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். Read more

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரைநிகழ்த்தி, அதை காணொளி மூலமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மௌலவியான முனாஜிப் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மக்காவுக்கு சென்று நாடு திரும்பும்போதே நேற்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவர். Read more

இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டதாக, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், காஷ்மிர் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலொன்றைத் தொடர்ந்தே, தாம் தமக்கான இடமொன்றை ஸ்தாபித்ததாக, அவ்வமைப்பு அறிவித்துள்ளது. இந்த மோதலின்போது, ஐ.எஸ் அமைப்பு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், அவ்வமைப்பின் அமாக் செய்திச் சேவை, நேற்று முன்தினம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. Read more