நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அடுத்தவாரம் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளபோதிலும்,
கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை அடுத்தவாரமும் திறக்க வேண்டாமென, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி, பூநகரி, முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாயார் உயிரிழந்துள்ளதுடன் 3 வயது பிள்ளை படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இரானுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழூவதும் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்து வருகின்றனர்.
கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை முதலான பகுதிகளில் நேற்றிரவு 9 மணிமுதல் அமுலாக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் கல்முனை – கல்முனைகுடி பிரதேசத்தில் காவற்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி, மண்டலகுடா பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல்
முஸ்லிம்களின் அடையாளம் என்பது அடிப்படைவாதம் அல்ல, ஆகவே முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டும், மீண்டும் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத தற்கொலைதாரிகள் 9 பேரின் முழுமையான விபரங்களும் வெளியாக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்த இடம், அவர்களின் உறவினர்கள் மற்றும் சொத்துக்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தனியார் விருந்தகம் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.