யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
மாணவர்கள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் நடத்தியிருந்தனர். ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்து அனைத்து பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டது. Read more
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
வவுனியா நகரசபை தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளரினால் வவுனியா நகரசபை சுகாதாரப்பகுதி தொழிலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு பாடசாலை மட்டத்திலும் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைப் பீடமும், பிரயோக விஞ்ஞான பீடமும் வவுனியா வளாகத்தில் நடத்தப்படுகின்றன. பாடநெறிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆங்கில மொழியில் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை நகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.