Header image alt text

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக

யாழ். உடுவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 70 குடும்பங்களின் பயனாளிகளுக்கு மின்சார வசதி மற்றும் வீடுகளுக்கான மின் இணைப்பு செய்வதற்கான காசோலைகள் 06.06.2019 வியாழக்கிழமை அன்று கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் அவர்களுடன், பிரதேச செயலாளர் ஜெயகாந்த், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ர.யுகராஜ், பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் கடந்த 06.06.2019 வியாழக்கிழமை அன்று நவீன கற்றலுக்கான திறனாய்வு வகுப்பறை (Smart Class Room) புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

வித்தியாலயத்தின் அதிபர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ரவிச்சந்திரன், நல்லூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் அன்ரன், Read more

இலங்கை விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றுபிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Read more

தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக் கொடுப்பு மூலமே ஏற்படுமென பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதுடன், இரு சமூகங்களுக்கும் இடையிலான சரியான புரிந்துணர்வே சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்கு அடிப்படையான விடயமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் ஜனாதிபதியாக எவர் வந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் எழுத்து மூலமோ அல்லது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படாது என்பது வரலாறு என குறிப்பிட்ட அவர் எதிர்வரும் தேர்தலில் ஓரளவு நியாயமாக, சொன்னதை நிறைவேற்றக்கூடியவர் என கருதப்படக்கூடிய வேட்பாளர் யார் என ஆராய்ந்து கூட்டமைப்பு ஆதரவளிப்பது குறித்து முடிவு எடுக்குமெனவும் குறிப்பிட்டார்.

(ரொஷான் நாகலிங்கம்) Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இந்திய பிரதமருக்கான இந்த வரவேற்பு இடம்பெற்றது.
Read more

முல்லைத்தீவு – மல்லாவி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலைய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்துள்ளார்.

முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் இருந்து இலத்திரனியல் முறை மூலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலையமே நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார்.

சுகாதார நிலைமை காரணமாக அவர் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இம்மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 11 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. Read more

கனகராயன்குளம் பிரதேசத்தில் அதிசொகுசு ஜீப் வாகனமொன்று இன்றுபகல் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் வாகனம் முழுவதுமாக எரிந்துள்ள நிலையில், அதில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். Read more