Header image alt text

ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் மிச்செல் கொனின்ஸ்க் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்திந்துள்ளார்.

அவர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். விசேடமாக பயங்கரவாதத்தை தடுக்கும் தேசிய மூலோபாயம் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்றையதினம் முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் மணிக் கட்டு இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும்போது அது வெடித்தமையால் படுகாயமடைந்துள்ளார். Read more

இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்புடன் பரீட்சைகள் திணைக்களத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. (அரச தகவல் திணைக்களம்)

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் பலியான நான்கு பேரின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த சடலங்களின் உடற் கூறுகள் பழுதடைந்துள்ளமையால் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின்போது இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 15 பேர் பலியாகினர். Read more

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் இன்றையதினம் காலை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீடடில் இருந்து 402 ஐபோன், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் உட்பட சில தொடர்பாடல் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் தங்கியிருந்த 2 இலங்கையர்கள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

கிளிநொச்சி, தம்பகாமம், வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்றுகாலை 9மணியளவில் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைத் திட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி தம்பகாமம், வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள தம்பகாமம், வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் குறித்த திட்டத்தின்கீழ் மாதிரி கிராமங்கள் இரண்டு அமைக்கப்பட்டு 32 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன. Read more

தியாகி பொன். சிவகுமாரனின் 45ஆவது நினைவு நிகழ்வு 05.06.2019 புதன்கிழமை காலை 10.00மணியளவில் யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது தியாகி சிவகுமாரனின் உருவச் சிலைக்கு அவரின் சகோதரி ஈகைச் சுடரினை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலின்கம், விந்தன் கனகரட்ணம், பா.கஜதீபன், சி.தவராசா, ஆனந்தி சசிதரன் மற்றும் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்த 30ஆம் திகதி 2வது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து முதற் தடவையாக மாலைத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார். Read more