2018ஆம் ஆண்டுக்காக கல்வியல் கல்லூரிக்கு பயிலுனர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2016 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியற் கல்லூரிகளில் தேசிய கல்வி போதனா கற்கைநெறியை பயில்வதற்கு இந்த முறை இரண்டு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் உயர்தர பெறுபேகளின் அடிப்படையில், 4000பேரும், 2017 ஆம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளின்படி 4000 பேரும் என மொத்தமாக 8000பேர், நாடளாவிய ரீதியிலுள்ள 19 கல்வியற் கல்லூரிகளில் 27 பாடநெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் ஜுன் மாதம் மூன்றாம் வாரம் முதல் கல்வியற் கல்லூரிகள் மட்டத்தில் நேர்முக பரீட்சைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.