பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் அனந்தி சசிதரன் பங்கேற்பு-

ananthiஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தாம் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாகவே இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள நிலையில், அதில் பங்ககொள்வது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்ற பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், 14ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை வெளியானதன் பின்னரே அது குறித்து தீர்மானிக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சி இராணுவ முகாமில் இராணுவவீரர் தற்கொலை-

suicideகிளிநொச்சி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை பயன்படுத்தியே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் 31 வயதான ஒருவரே மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் கைது-

arrestமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் அந்தோனி பெரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 9 மில்லியன் ஷரூபாவுக்கான காசோலை மோசடி சம்பவம் தொடர்பில் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து இவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.