யுத்தக் குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றில் விசாரணை-வீ.ஆனந்தசங்கரி-
யுத்தக் குற்றங்கள் கலப்பு நீதிமன்றத்திலும் உள்ளக பொறிமுறையின் கீழ் பகுதி பகுதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறைமை மற்றும் அமெரிக்காவின் உள்ளக விசாரணை முறைமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உள்ள கடும் விளைவுகளைப் பற்றி உணராமல் முன்வைக்கபடுகின்ற கருத்துக்களால் பொதுவான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டாலும், ஒருசில குற்றங்களை அந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது கடினம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more









