Header image alt text

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நடைபயணம் யாழ்ப்பாணத்தை அடைந்தது-

nadai payanamஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. இதன்போது பல படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படும் செம்மணியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவி கிருசாந்தி படுகொலை மூலமே அனைத்து உண்மைகளும் அம்பலமாகியிருந்தது. எனினும் இன்றுவரை அப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படாதிருப்பதுடன் சிலர் தப்பித்துமிருந்தனர். அப் படுகொலைகள் நிகழ்ந்த பகுதியினிலேயே நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை குறித்த நடைபயணத்தின்போது வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் அவர்களை இவர்கள் சந்திப்பதுடன், அதன் பின்னர் யாழ். சங்கிலியன் தோப்பில் குறித்த நடை பயணத்தினை நிறைவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்-

ranilஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர்இ குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிஇ வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் முக்கயஸ்தர்களை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலின்போது தொழிநுட்பதுறை தொடர்பில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையின் தேயிலை ஏற்றுமதி மற்றும் இலங்கை விவசாயிகளுக்கான இந்திய சந்தைவாய்ப்பு என்பன குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது அவதானம் செலுத்தப்படும் எனவும் பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

சம்பூரிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை-

busதிருகோணமலை சம்பூரிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை 30 வருடங்களின் பின்னர் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது. சம்பூர் கட்டைப்பறிச்சான் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வினையடுத்து பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நேற்று முதல் சம்பூர் கொழும்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பஸ், சம்பூரிலிருந்து இரவு பத்துமணிக்கு புறப்பட்டு அதிகாலை காலை 6மணிக்கு கொழும்பு கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தினை வந்தடைந்ததன் பின்னர் அங்கிருந்து வெள்ளவத்தையில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளது.

கொட்டதெனியாவ சிறுமி வல்லுறவுக்கு பின் கொலை-

kotakethanaகொட்டதெனியாவ சேயா தேசிய சிறுமியின் மரணம் கொலை என்றும் சிறுமி கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இன்று இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. துணி ஒன்றினால் சிறுமி கழுத்து இறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பொலிஸார் அதிபர் விசாரணை குழுக்களை அமைத்துள்ளார்.

தொல்புரம் கலாயத்தில் 50 மாணவர்கட்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-(படங்கள்)

P1070729யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அழைப்பில் பேரில் வலி மேற்கு பிரதேசத்தின் தொல்புரம் பகுதியில் அமைந்துள்ள கலாலயம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட வலி வடக்கு விழிசிட்டிப் பகுதியை பிறப்பிடமாகவும் லண்டன் மாநகரப் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஸ்ட வைத்திய நிபுணர் உயர் திரு.சி.நவரட்ணம் அவர்கள் அப் பகுதியில் வசிக்கின்ற பாடசாலை மாணவர்கள் 50 பேருக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் லண்டன் மாநகரில் பணியாற்றும் வைத்திய கலாநிதி. நவரட்ணம் கணேஸ், விரிவுரையாளர் திருமதி. கணேஸ் மற்றும் குறித்த அமைப்பின் நிர்வாகிகள் பெற்றோர்கள் ஆகியோரும்; கலந்து சிறப்பித்தனர். Read more

கோட்டாபய, நாமல் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்-

namal kottaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளனர். வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இருவரும் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். காணி அபிவிருத்தி அதிகார சபைக்கான நிதியை டீ.ஏ ராஜபக்ஸ ஞாபகார்த்த நூதனசாலையின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிவாஜிலிங்கம் மின்னஞ்சல்-

sivajiஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் {ஹசேனுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வு இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகின்ற நிலையில், இந்த மாநாட்டில் ஊடாக தாங்கள் எதிர்பார்ப்பது என்ன? என்ற விபரங்களை உள்ளடக்கிய மனு ஒன்றே இவ்வாறு மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒன்பது அம்ச கோரிக்கைகள் அடங்கிய அந்த மனுவின் பிரதிகள், இந்திய துணை தூதரகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் கையளிக்கப்பட உள்ளதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியம்-

mangalaஇலங்கையில் அரசியல் தீர்வு உட்பட முற்போக்கான சீர்த்திருத்தங்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலம் சாத்தியப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு புதிய அரசியல் யாப்புத் திருத்தத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கவென உள்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும், ஆகையால் கடந்த கால ஏமாற்றங்களை புறந்தள்ளி நம்பிக்கையுடன் புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியீடு-

al hussainஇலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா சபையின் விசாரணை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹ_சைன் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை பேரவையின் 30வது கூட்ட தொடக்க உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆறு வருடங்களுக்கு முன் இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் பாரிய யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்று பொதுமக்கள் உயிர் பலியானார்கள். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பேரவை கூடுதல் கவனம் செலுத்துகிறது. 2014 மார்ச் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய எனது ஆலோசனையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையை புதன்கிழமை வெளியிட உள்ளேன். அதில் கடுமையான யுத்த தீவிரத்தன்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி தேர்தலின்பின் ஜனாதிபதி சிறிசேன தனது தலைமையில் புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்வைத்துள்ள நோக்குகளை நாம் வரவேற்கிறோம். ஆனால் இலங்கையர்களுக்கான பொறுப்புக்கூறல், நம்பகத்தன்மை, கடந்தகால தோல்வி தொடர்பில் ஆழமான நிறுவன மாற்றங்கள் நோக்கி ஐநா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக திலக் ரணவிராஜா நியமனம்-

embasadorபிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தரும், ராஜதந்திரியுமான திலக் ரணவிராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 8ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதியைச் சந்தித்து தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைக் கையளித்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபாலவின் விசேட வாழ்த்துச் செய்தியையும் கையளித்திருந்தார். கடந்த ஜனவரி தொடக்கம் திலக் ரணவிராஜா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசகர்களில் ஒருவராகக் கடமையாற்றி வந்தார். அதற்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்குகமைச்சு, ஊடக மற்றும் தொடர்பாடல் அமைச்சு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு, சமூக நலனோம்பல் அமைச்சு, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, மஹாவலி அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம், ஐக்கிய நாடுகள் பொருளாதார செயற்றிட்டம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, உலக சுகாதார அமைப்பு என்பவற்றிலும் இவர் ஆலோசகர் தர பதவிகளை வகித்துள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை பதிவுசெய்ய நடவடிக்கை-

UNP (2)நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தல் நிமித்தம் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான இந்த கூட்டணியில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகித்திருந்தன. இந்த கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, அதன் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளுராட்சி தொகுதிகளை மீள்நிhணயம் செய்வதற்கான அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளநிலையில், அதனை சிறுபான்மை கட்சிகளின் சார்பில் தாமும், அமைச்சர் ரவுப் ஹக்கீமும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைச்சர் மனோகணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம்-

ranil wickramaபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளையதினம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு தினங்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பில் எதிர்வரும் 30ம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இருவருக்கும் இடையில் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான பாலம் அமைத்தல், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இலங்கை மற்றும் இந்திய பிரதமர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இதேவேளை, இந்தியா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், தங்களுக்கான மீன்பிடி அனுமதியை உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு, தமிழக மீனவர்கள் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. இலங்கை கடற்பரப்பில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கோரி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more