japanஇலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் 33 பில்லியன் யென் பெறுமதியான கடனை வழங்கியுள்ளது. இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் தற்போது முன்னெடுக்கப்படும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்குமென இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

10 பில்லியன் யென், அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனாக வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் 23 தசம் 137 பில்லியன் ரூபா நிதி, அனுராதபுர வடக்கு நீர்விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. இது தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்திடல் மற்றும் ஆவணப் பரிமாற்றம் ஆகியன நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.