Header image alt text

dfddfdfdfமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்தக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் இன்று கவனயீர்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிற் சங்கங்கள் இணைந்து காந்தி பூங்கா முன்பாக இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர். தொழிலாளர்களுக்கு வாராந்தம் 6 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும், அரசாங்கமே ஏன் மௌனம், நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த உத்தரவிடு, Read more

ertசர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு இன்றுகாலை விழிப்புணர்வு நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ் சுன்னாகம், சுழிபுரம், நல்லூர், மானிப்பாய், நீர்வேலி, நல்லூர் பாரம்பரியம், நகரமைய றோட்டரக் கழகங்கள் மற்றும் கருவி நிறுவனமும் இணைந்து குறித்த நடைபவனியை ஒழுங்கு செய்திருந்தன. இன்றுகாலை 8 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகிய குறித்த நடை பவனியானது கல்வியங்காட்டு சந்தியில் நிறைவடைந்தது. Read more

abdul kalamஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 85 வது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் யாழ் பொது நூலகத்தின் இந்திய பகுதியில் இன்றுகாலை இடம்பெற்றது. Read more

ganesharajah-judgeகுற்றவாளிகள் ஆஜராகாத வழக்குகள் மற்றும் பாராமரிப்பு வழங்குகளில் கிராம சேவகர்கள் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கிராம சேவகர்கள் தமது கிராம எல்லைக்குட்பட்ட எதிரிகள், பிரதிவாதிகளின் வதிவிட விபரங்களை வெறும் அறிக்கை மூலம் கடந்த காலங்களில் அனுப்பிவந்துள்ளனர். Read more

ranilபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரசெல்ஸ{க்கு, இன்று பயணமாகவுள்ளார்.

பெல்ஜிய பிரதமர் சார்ள்ஸ் மிச்செல், அந்நாட்டு இளவரசர் லோரன்ட் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய கவுன்ஸில் உயர்மட்டத் தலைவர்களுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளது.

maithripala_sirisenaபிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா பயணமாகியுள்ளார்.

8ஆவது தடவையாக நடைபெறும் இந்த BRICS மாநாட்டின் தலைமை பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். Read more

tharshikaசுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.

சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

img_2639தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரித்தானிய கிளை அமைப்பாளரும், மத்திய செயற்குழு உறுப்பினருமான தோழர் ஜெயம் (வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன்) அவர்களின் இறுதி நிகழ்வு நேற்று (13.10.2016) லண்டனில் நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. பிரித்தானிய மண்ணில் நீண்டகாலம் கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்த மூத்த தோழரின் இறுதி நிகழ்வில் லண்டனுக்கு வெளியே பல மைல்கள் தொலைவில் இருந்து கழக தோழர்கள் பலர் வந்து தமது இறுதி மரியாதையை செலுத்தியிருந்தனர். Read more

dகேகாலை – கரடுபான பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

51 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், தனது வீட்டில் வைத்தே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இவரால் இறப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றும் எழுதிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Read more

img_9452தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு, கழகத்தின் அமைப்பாளர் திரு வ.பிரதீபன் தலைமையில் கனடா வாழ் சேமமடு உறவுகளின் பங்களிப்புடன், வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் நேற்று (13.10.2016) வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் முதியோருக்கான பயணப்பொதிகளும், விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன், உறுப்பினர்களான கெர்சோன், சஞ்சீவன், பிரகாஷ்கர் ஆகியோருடன் ஆனந்த இல்லத்தின் நிமலன் மற்றும் ஆனந்த இல்ல முகாமையாளர் திருமதி ஜெயா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more