Header image alt text

fausiஇராஜாங்க அமைச்சர் ஏ.எச.எம்.பௌசியை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சுக்கு சொந்தமான 1 கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜீப் வண்டியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ssஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் சில பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் சில பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஹற்றன் -கொழும்பு பிரதான வீதியை மறித்து செனன் சந்தியில் சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று முற்பகல் சம்பள போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது. Read more

suicideதூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இன்று மட்டக்களப்பு கூழாவடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூழாவடி 8ஆம் குறுக்கை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான புண்ணியமூர்த்தி சக்திவேல் (31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

china-shipகொழும்பு துறைமுக நகருக்கான (போர்ட் சிற்றி) காணி மீள்நிரப்பல் வேலைகளில் ஈடுபடவுள்ள மூன்று மணல் அகழ்வு கப்பல்களில் முதலாவது கப்பல் சீனாவிலிருந்து கடந்த வியாழக்கிழமை கொழும்பு தெற்கு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மணல் அகழ்வு பிரதேச எல்லை அனுமதிப்பத்திரம் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் கருத்திட்ட நிறுவனமானது கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அபிவிருத்திக்கான அனுமதிப்பத்திரத்துடன் இணங்குமாறு காணி மீள்நிரப்பல் வேலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சகல அனுமதிகளையும் ஒப்புதல்களையும் தற்போது கொண்டுள்ளது. Read more

pranab-mugarji-ranilஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றுமாலை புதுடில்லியிலுள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பதாக இந்திய குடியரசுத் தலைவரிடம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more

antonio-goodrestபோர்ச்சுக்கல் நாட்டு முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

15 நாடுகளை அங்கமாகக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின், பொதுச்செயலர் பதவிக்கு அதிகாரப்பூர்வமில்லாத வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டு முன்னாள் பிரதமர் குட்டெரெஸ், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டாலினா ஜோர்ஜிவா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. Read more

ritaசிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதி நிதி (Rita Izsák-Ndiaye) ரீட்டா சுவைக் நதையே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி இவர் இலங்கையை வந்தடையவுள்ளார். நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வடக்கு மாகாணம், வட மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். Read more

ranil-modiஇலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எட்கா ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதற்கு இருநாட்டு பிரதமர்களும் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் இடம்பெறும் பொருளாதார மாநட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sdffgdfd“Wushu Sanda” சர்வதேச போட்டியில் இலங்கை சார்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் தெரிவாகியுள்ளதுடன், மேற்படி நான்கு பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவின் மணிப்பூருக்கு பயணமாகவுள்ளதாக “Wushu Sanda” பயிற்றுவிப்பாளர் செ.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த “Wushu Sanda” பயிற்றுவிப்பாளர் செ.நந்தகுமார் உட்பட பாடசாலை மாணவர்களும் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். Read more

ajith nivatமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றுகாலை அவர் அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனம் ஒன்றின் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட இருப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கூறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அண்மையிலும் அவர் அங்கு ஆஜராகியிருந்தார்.