Header image alt text

karunasenaஇந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இடம்பெறுகின்ற பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு ஒத்துழைப்புககளை கோரும் பட்சத்தில் அது குறித்து சிந்திக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை ஊடான பயங்கரவாத ஊடுறுவல்கள் குறித்து இந்தியா ஏற்னவே எச்சரித்திருந்த நிலையில், காஷ்மீர் எல்லை பகுதியில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. அந்தவகையில் இலங்கையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், Read more

airportவிமான போக்குவரத்து கட்டுபாட்டு பணியாளர்கள் மந்தகதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 4.45 மணியிலிருந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விமானப் பயணங்களுக்கு தடையேற்படலாம் என விமான போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஜுன ஹதராகம குறிப்பிட்டார்.  Read more

mihinமிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் சிறீலங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கமைய தொடர்ந்து மிஹின் லங்கா விமான நிறுவனம் ஊடாக மேற்கொள்ளவுள்ள விமான பயணங்கள் அனைத்தும் சிறீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போது, மிஹின் லங்கா விமான சேவை ஊடாக பஹ்ரைன், மதுரை, டாக்கா, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் இனி சிறீ லங்கன் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

deadகிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 8மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரவு பகலாக இரணைமடுக் குளத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய கனகராசா கோபிநாத் என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

american-websiteஇலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகம் வழங்கும் சேவைகள், செய்திகள் உள்ளிட்ட தகவல்களை இந்த புதிய இணையத்தளத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். டம.ரளநஅடியளளல.பழஎ என்ற இணைய முகவரியில் புதிய இணையத்தளத்தை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

sdfdfddவவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கிராமசேவகர் எனவும், அவர் தற்போது அங்கிருந்து மாற்றலாகி தமிழ் கிராமமான ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.
Read more

sdfஇலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவ்வாறான உதவிகளை வழங்கமுடியும் என்பது தொடர்பிலும் இலங்கையில் வடக்கு பிரச்சினை குறித்தும், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் தலைமையிலான குழு, கடந்த வெள்ளிக்கிழமை, நியூசிலாந்தை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில், இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று, ஹொக்லேன்டில் உள்ள அரசாங்க இல்லத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. Read more

xcமத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வைத்தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும், என, இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் தாம் தெரிவித்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், கூறியுள்ளார்.

அவ்வாறு இல்லை எனின் நல்லிணக்கத்தினை கொண்டுவருவது மிக கடினம் என தான் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுமோட்டாவுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே வடமாகாண முதலமைச்சர், மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more

D.Sithadthan M.P,.‘எழுக தமிழ்’ பேரணி சர்வதேசத்துக்கு ஒரு தெளிவான செய்தியைச் செல்லியுள்ளது

நேர்காணல் மகேஸ்வரன் பிரசாத்

எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும் கவனயீர்ப்பு போராட்டமே. தீர்வொன்றை வழங்கக் கூடாது என கண்டியிலிருந்து பேரணி நடத்த முடியுமாயின் தீர்வொன்றை வழங்குங்கள் எனக் கூறி பேரணி நடத்துவதற்கு எமக்கு உரிமை இல்லையா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வியெழுப்பினார்.

Read more

sampanthan‘பிளவுபடாத நாட்டுக்குள் அனைத்து மக்களும் உள்ளடங்கப்படக்கூடிய வகையில் அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்கள், முயற்சிகளை நாங்கள் நல்கி வருகின்றோம்’ என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
Read more