parathi005மது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திரு.விஜய் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான மழைக்கவசங்கள் வழங்கி வைத்துள்ளார்;.

பாரதி இல்ல 108 சிறார்கள் மழைகாலங்களில் பாடசாலை செல்ல மழைக்கவசம் இல்லாது பாடசாலைக்கு செல்வதில் பெரும் சிரமப்படுகின்றார்கள் என்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் திரு.விஜய் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு சென்றதை அடுத்து திரு.விஜய் அவர்களால் அவரது குடும்பத்துடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்துடன் நேரில் சென்று இல்லச் சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான 108 மழைக்கவசத்தை வழங்கி வைத்துள்ளார்.இன்று இவ் கைங்கரியத்தை ஆற்றியுள்ள அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இல்லச் சிறார்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இவர்கள் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து நற்பணிகள் செய்ய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டி பிராத்திக்கின்றோம்.

parathi001parathi004parathi003parathi002parathi005parathi008parathi007parathi006