இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு விரைவில் பூர்த்தி செய்யப்படும் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற “ரைசினா கலந்துரையாடல் 2017” மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க முடியும் என்று நாம் நம்புகிறோம். இதுதொடர்பாக இந்தியா- இலங்கை இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தெற்காசியாவின் ஆழமான துறைமுகமான திருகோணமலையை, இந்தியா அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு விரைவில் பூர்த்தி செய்யப்படும். Read more








