புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான மக்களின் ஆணை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமே அன்றி 2020ஆம் ஆண்டு வரை புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் நிராகரித்தால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று ஏற்பாடு என்னவாக இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். Read more








