Header image alt text

sureshஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசு பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கும் 18 மாதகால அவகாசத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கால அவகாசம் கோருவது அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். கால அவகாசம் நீடித்தால், தமிழ் மக்களின் பிரச்சினை நீர்த்துப்போன பிரச்சினையாக மாறிவிடும். எனவே அரசாங்கம் கோரும் கால அவகாசம் நீடிக்க கூடாது. Read more

fsdகிளிநொச்சி குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கு ரூபா 20,920 பெறுமதியான கணித உபகரணப்பெட்டிகள், பென்சில் பெட்டிகள், கலர் பெட்டிகள் மற்றும் உடற்பயிற்சிக்கான ஆடைகள் என்பன இன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைச் செயலகத்தில் வைத்து பாடசாலை ஆசிரியர் திருமதி.ஜெசிந்தா ராகவன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேவைக்கான விண்ணப்பமானது பாடசாலை அதிபரினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க பாடசாலை மாணவர்களின் கல்வியினையும் திறன் விருத்தி செயற்பாடுகளையும் ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்பட்டுள்ளது. Read more

arrestகனடா டொரன்டோ பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் (இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மோசடி குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ranil singaporeஇலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இந்த வருடத்திற்குள் கைச்சாத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் லுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பும் வழியில் நேற்று இரவு சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது இரண்டு பிரதமர்களும் கலந்துகொண்ட இரவு விருந்துபசாரத்தின்போது இது தொடர்பில் பேசிக்கொண்டதாக சிங்கப்பூர் பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவம் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

sadffdகேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு படையினரின் அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் விரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் படை காணியாகும், தேவையில்லாமல் உட்செல்லல் தடை, தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் இன்று அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது. Read more

sfd (2)இலங்கையில் சிறுபான்மை மக்கள் வாழும் மற்றும் வழிபடும் இடங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன், சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயற்பாடுகள் குறித்து மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன் இவ்வாறு கூறியுள்ளார்.

weeeகேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் நிலத்தை தங்களிடம் கையளிக்கக் கோரி இன்றும் 18வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்புகளும் தங்களின் தார்மீக ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் இன்று கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களும் கேப்பாவிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். இன்றுகாலை ஒன்பது மணிமுதல் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-6cdd1bdc68ba8fb64ce34c7474c57debd213c90ab6eca2882084170723346155-Vயாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட வலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் இன்றுகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றுகாலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக புதிய அதிபரை மாற்றி பழைய அதிபரை மீண்டும் பாடசாலையில் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டநிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் ஆகியோருக்கு மகஜர் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. Read more

sfdநியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8ஆவது புதிய கண்டமாகக் கருதமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. அதன் ஏனைய 94 சதவீதமான பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

arrestசட்டவிரோதமான முறையில் படகு மூலம் நியூஸிலாந்து நோக்கிச் செல்வதற்கு தயாராக இருந்த 08 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் சட்ட அதிகார பிரிவு குழுவினரால் கதிராணை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, மாரவில, கல்முனை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டான பொலிசார் இவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.