northவட மாகாண அமைச்சர்களில் இருவரை ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக உத்தரவிட்டு, ஏனைய இருவருக்கும் எதிராக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்ய தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.இந்த முடிவையடுத்து அவரை பதவி நீக்கம் கோரும் கடிதத்தை புதன் இரவு அவசர அவசரமாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் அந்தக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் உட்பட 18 பேர் கையெழுத்திட்டு கையளித்துள்ளனர்.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து 4 பேரையும் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கைக்கு தமிழரசுக்கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

இதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய முதலமைச்சராக அவைத்தலைவர் சி. வி.கே.சிவஞானம் நியமிக்கப்படலாம் என யூகங்கள் நிலவுகின்றன.

வடக்கு ஆளுனர் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜவை அழைத்து பேசியுள்ளர். இதே நேரம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைத் தொடர்பு கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்கும்படியும் கேட்டுள்ளார்.
வடக்கு முதலமைச்சர் வீட்டில் ஓர் அவசர சந்திப்பு நடைபெற்றுள்ளது அதில் சில வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் தமிழரசுக்கட்சியின் இறுதித்தீர்மானம் தொடர்பாக முடிவெடுக்கவும் இப்பிரச்சனைகளை கையாளவும் த.தே.கூ. தலைவர் இரா.சம்பந்தன் யாழ் விரைத்துள்ளார்