கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த அனைத்துப் பீடங்களையும் இன்றுமுதல் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார்.
பல்கலைக்கழக விடுதியிலுள்ள சகல மாணவர்களும், நாளை பகல் 12 மணிக்கு முன்பு தங்களுடைய உடமைகளுடன் வீடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகத்தின் பேரவை, திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஆகியவற்றை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more








