UN human right commissionஇலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்களில் பொறுப்புக்கூற தவறி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினது உலக பருவகால மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் கடந்த 2015 ஒக்டோபரில் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தில், பல உறுதிமொழிகளை வழங்கியது. நீதிவழங்கல், பொறுப்புக்கூறல், பாதுகாப்பு தரப்பின் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களில் இந்த உறுதிமொழிகள் அமைந்தன. ஆனால் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது. எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.