Header image alt text

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தி, தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைகழக கலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கூறுகையில் அவர் இதனை கூறியுள்ளார். Read more

மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்பு பகுதியில் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மீது நேற்று நள்ளிரவு மீனவர்கள் தாக்கியதில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை வீசி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீன்பிடி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் களப்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more

இலங்கையுடன் சிறந்த ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வர்த்தகத்துறை அமைச்சர் மொஹமட் பெர்வேஸ் மாலிக் இதனைத் தெரிவித்துள்ளார். Read more

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏதிலி அந்தஸ்த்து கோருவோரைக் கட்டுப்படுத்த அடுத்தவாரம் ஜப்பான் புதிய நடைமுறையை அமுலாக்கவுள்ளது.

3 முறை ஜப்பானில் ஒருவர் சட்ட ரீதியாக ஏதிலி விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும். Read more

சிறீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதி ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்றுகாலை இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ள தொழிற்சங்கத்திற்கும், சிறீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் நிர்வாகத்துறையினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பித்தது. இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. Read more

தனியார் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களை மட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒரே வகையான சத்திரசிகிச்சைகளுக்கு, ஒவ்வொரு தனியார் வைத்தியசாலைகளிலும்  வெவ்வேறான கட்டணங்கள் அறவிடப்படுவதாக தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக சபை குறிப்பிட்டுள்ளது. Read more

மாலைதீவு கடற்பரப்பில், கவிழ்ந்த நிலையில் மிதந்துகொண்டிருந்த இலங்கைக்குச் சொந்தமான மீன்பிடிப் படகொன்றை அந்த நாட்டின் கரையோர பாதுகாப்புப் படை கண்டுபிடித்துள்ளது.

இந்தப் படகை கரைக்கு இழுத்து வரும் முயற்சியில் கரையோரப் படையினர் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. படகு மட்டுமே தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை என்றும் படையினர் கூறியுள்ளனர். Read more

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று அதிகாலை 4மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் இரணைமடுச் சந்தியில் வைத்து ஒன்றின் பின் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே நேற்று மோதல் இடம்பெற்றது. இதில் மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Read more

மட்டக்களப்பு – மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தாக்குதல், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக போட்டியிடும் எஸ்.சிவசுந்தரம் என்பவரது வீட்டின் மீது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இப் பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more