Header image alt text

லெட்வியா ஜனாதிபதி Raimonds Vejonis இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்றையதினம் மாலை விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

அவருடன் மேலும் 4 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் கொண்ட விஜயத்தினை அவர் மேற்கொண்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 188 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். அரச வாகனங்களைப் பயன்படுத்தியமை, மக்களை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய தேர்தல் கண்காணிப்பு குழுவில் இதுவரை 69 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read more

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்களுடனான விஷேட சந்திப்பொன்றுக்கு, சபாநாயகர் கரு ஜெயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த அறிக்கை தொடர்பிலான விவாதத்திற்காக, விரைவாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு, கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரியுள்ளனர். இதற்கமைய, பாராளுமன்றத்தை கூட்டும் தினம் பற்றி கலந்துரையாடவே, கரு ஜெயசூரிய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. Read more

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழு இன்று வட மாகாணத்திற்கு செல்லவுள்ளது.

இந்தக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்திக்க உள்ளது. அதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தைப் புறக்கணித்தமைக்காக அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் இலங்கை தூதுவராக செயற்பட்ட போது, தூதுவராலயத்திற்கான கட்டடத்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசிற்கு சொந்தமான ஒரு இலட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. Read more

பூநகரி – செல்லையாதீவு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதற்கு சாட்சியாளராக யாழில் இருந்து அவ் வீதியூடாக சென்று கொண்டிருந்த பார ஊர்தி சாரதி ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்து விசாரணைகள் இடம்பெற்றன.

இந்நிலையில், சட்ட வைத்திய அதிகாரியினதும் மரண விசாரணை அதிகாரியினதும் அறிக்கைகளின் பிரகாரம் குறித்த நபர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒருவர் பொலிசாருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக, குறித்த விபத்து பார ஊர்த்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்த்தி சாரதியை கைதுசெய்துள்ளனர். Read more

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

சுமார் ஒன்றரை தசாப்த காலத்துக்குப் பின் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரதமருடனான இந்தச் சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் பங்கேற்றிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவ தயாராக உள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருப்பது 15 வருடங்களுக்கு பின்னராகும் என்பது குறிப்பிடத்தக்கது. Read more

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஷஸ்மத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய நாட்டில் நிலவிய உர தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதன் நிமித்தம், உரிய நேரத்தில் உரத்தினை இலங்கைக்கு அளித்த பாகிஸ்தானிய பிரதமர் ஷஹித் கஹகான் அப்பாசி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றியினை தெரிவித்தார். Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

குறித்த உத்தரவை மீறி நடத்திச் செல்லப்படுகின்ற காரியாலயங்கள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறினார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். Read more