Header image alt text

வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் காண்டீபனின் தேர்தல் காரியாலயம் நேற்றுமாலை 4.30மணியளவில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத் தலைவரும், மாகாணசபை உறுப்பினருமான டொக்டர் சத்தியலிங்கம், வட மாகாண அமைச்சர் க.சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், பா.கஜதீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சேனாதிராஜா, சுந்தரலிங்கம் காண்டீபன், சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), Read more

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், 3 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்றுகாலை 9மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. மாலை 4மணிவரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக சுமார் 560,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகின்ற தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்கு தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more

திருகோணமலை தோப்பூர் களப்புக் கடலில் சுமார் 600 இற்கும் அதிகமான மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். இறங்குதுறை இன்மையால், நீண்ட காலமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக இந்த மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஓய்வு மண்டபம் இல்லாமையும் இவர்கள் எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினையாகவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பு, தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுத்த சமூக மீள் எழுச்சித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, அமைப்பின் வரலாறு நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்பு, யுத்தத்தினால் சிதைவடைந்து காணப்பட்ட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில், தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்கவும் இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கட்டியெழுப்பவும் புளொட் அமைப்பு தனது வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக தீவிரமாக செயற்பட்டிருந்தது. 

வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்திலும் பல தோழர்களின் இன்னுயிரைப் பலியாக்கி மக்களுக்கு தற்காலிகமாக கிட்டைத்திருந்த சமாதானச் சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தது. Read more

யாழ். விடத்தற்பளை கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சாவகச்சேரி பிரதேச சபையின் 14ம் வட்டாரத்திற்கான வேட்பாளர்களான திரு. மயூரன், செல்வி. அருட்சோதி ஆகியோருடன் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் யாழ் மாநகர சபைக்கான வேட்பாளர் ஆசிரியர் தர்சானந்த் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையை மேற்கொண்டதுடன், சமகால அரசியல் நிலைமைகளையும் பொதுமக்களுக்கு விளக்கினார்கள். Read more

வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் 2ம் வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரையும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விளக்கவுரையும் நேற்று மயிலணி ஜனசக்தி சனசமூக முன்றலில் இடம்பெற்றது.

இதில் வேட்பாளர்களான திரு. சுதர்சன், திரு. லோகராஜன் ஆகியோருடன் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

பிரபல விமான சேவைகள் நிறுவனமான இண்டிகோ, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய விமான சேவைகளை நேற்று ஆரம்பித்துள்ளது.

சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து இலங்கைக்கு நாளொன்றுக்கு மூன்று விமான சேவைகளை நடத்த இண்டிகோ திட்டமிட்டுள்ளது. இதன் முதல் விமானம் சென்னையில் இருந்து நேற்றுக் காலை 8.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் வந்து சேர்ந்தது. Read more

விசேட தேவையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாதாயின், பிரதேச தெரிவத்தாட்சி அதிகாரியிடம் போக்குவரத்து வசதியை கோரி விண்ணப்பபடிவத்தை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொது போக்குவரத்து சேவை ஊடாக வாக்காளர் நிலையத்திற்கு செல்லமுடியாதாயின் அது தொடர்பில் குறித்த நபரால் அல்லது அவர் சார்பான வேட்பாளர் அல்லாத வேறு ஒரு நபரால் விண்ணப்பத்தை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. Read more

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரைக் காண, அவரது கணவர் நேற்றுப் பகல் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு, தன் பொலிஸ் மனைவியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். Read more