யாழ். சாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. Read more
அவுஸ்திரேலியாவில் சட்டபூர்வமாக தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏதிலிகள் நிர்கதியாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
எதிர்வரும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா, இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைத்தரும் பயணிகளின் பயணப்பொதிகள் திருட்டுப்போவது தொடர்பில், கடந்த மூன்று மாத காலப்பகுதியில், 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் முறைமை குறித்த ஆர்வலர்களின் மாநாடு ஒன்று கொழும்பில் கடந்த தினம் இடம்பெற்றுள்ளது. இதில் அரசியல் கட்சிகள், தேர்தல் சார்ந்த நிபுணர்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பிலான ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சைட்டம் வைத்தியக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.
யாழ். இரணைத்தீவில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி, பொதுமக்கள் அந்த தீவில் ஐந்தாம் நாளாகவும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் சந்திரசேகரன் சங்கவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பாம்பீச் பகுதியில் அவர்கள் கைதாகியுள்ளனர்.
கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியளார் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.