ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புலிகளின் ஆதரவாளர்கள் 4 பேருக்கு தமிழக நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தமிழகம் இராமநாதபுரம் மாவட்ட நீதவான் ஏ.கயல்விழியால், கிருஷ்ணகுமார், சுபாஷ்கரன், ராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகிய நால்வருக்கே நேற்று இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டனையும், ராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. Read more
திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பெரிய மிதக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், இலங்கையில் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி உதயன்மூலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.
புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 8 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தையில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்துகொள்வதாக விசேட தேவையுடைய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
மே முதலாம் தினத்தன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.