சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான முதலீடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இலங்கையும் இணைந்துள்ளது.

சிறுவர்களுக்கான தெற்காசிய பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினமும் நேற்றும் இடம்பெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, துஷிதா விஜேமான்ன மற்றும் ஆஸ{ மாரசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தெற்காசிய பிராந்தியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான முதலீடுகளை ஊக்குவிக்க ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான நிதியமான யுனிசெப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மில்லியன் கணக்கான ஏழைகளுக்குத் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தி, பிராந்தியத்தில் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.