இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தைக் கூறியுள்ளது. மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகரும் சுவீடன், பின்லாந்து, சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதுவர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு, Read more
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சுமார் 6,000 சீனர்கள் பணியாற்றுகின்றனர் என, கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன.
இந்தியாவின் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் இலங்கையில் இன்று ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் உட்பட சாரதிகள், அனைத்து வேலையாட்கள், இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடத்தினர்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமக்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.