 நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
அதனடிப்படையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்றுமாலை தெரிவித்திருந்தார். Read more
 
		     புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் அம்பாறை காரைதீவு பாடசாலைப் பிள்ளைகள் ஐவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் அம்பாறை காரைதீவு பாடசாலைப் பிள்ளைகள் ஐவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.  குளியாபிட்டி – ஹெட்டிபொல – பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பிரதேசங்களுக்கும் நாளை அதிகாலை 4 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
குளியாபிட்டி – ஹெட்டிபொல – பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பிரதேசங்களுக்கும் நாளை அதிகாலை 4 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.  தடை செய்யப்பட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரான, மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் ஆர். எம்.பி. நெலும்தெனிய இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரான, மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் ஆர். எம்.பி. நெலும்தெனிய இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார். வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது. அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார்.
தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது. அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.  இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.